வெள்ளி, 4 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :866


திருக்குறள் -சிறப்புரை :866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.---- ௮௬௬
இன்னார் இனியார் என்று பாராமல் யாவரிடத்தும்  கடுஞ் சினம் கொள்பவனாகவும் ; அளவு கடந்த காம வேட்கை உடையவனாகவும் ஒருவன் இருப்பானாயின் அவனுடைய பகைமையை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். (அவன் தானே அழிவதற்கு அஃது ஒன்றே வழி.)
”சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்.”—பதிற்றுப்பத்து.
கொடுஞ் சினமும் மிகுந்த காம வேட்கையும் அளவிறந்த கண்ணோட்டமும் பகைவர்க்கு அஞ்சுதலும் பொய் கூறலும் பொருளாசையும் அலவுக்கு மிஞ்சிய தண்டனை அளித்தலும் இவை போன்ற பிறவும் இவ்வுலகத்தில் அறவழியில் ஆட்சி செலுத்தற்குரிய அரசனது ஆணைச் சக்கரத்திற்குத் தடையாக நிற்பன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக