திருக்குறள் -சிறப்புரை :884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவுந் தரும்.--- ௮௮௪
மனம் மாறாத உட்பகை ஒருவனுக்குத் தோன்றிவிட்டால் அது அவனுக்குச் சுற்றத்தார்
விலகிச் செல்வதற்குக் காரணமான துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
”கட்டு இலா மூதூர் உறைவு இன்னா”—இன்னாநாற்பது.
சுற்றமாகிய கட்டு இல்லாத பெருமையுடைய பழைய
ஊரிலே வாழ்தல் துன்பமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக