திருக்குறள் -சிறப்புரை :880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். --- ௮௮0
(உளர் அல்லர்)
பகைவருடைய தலைமையை அழிக்க இயலாதவர் மூச்சு உடையவராயினும் உயிரோடு இருக்கின்றவர் அல்லர்.
“தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று
என்ப.” –தொல்காப்பியம்.
தும்பை என்னும் புறத்திணை, நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறன் ஆகும்.
அத்திணை தன்னுடைய வலிமை பொருளாகக் கொண்டு எதிர்த்து வந்த வேந்தனை எதிர்த்துச் சென்று
போரிட்டு அழிக்கும் சிறப்பினைக் கூறுவதாகும் என்பர் சான்றோர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக