வியாழன், 10 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :872


திருக்குறள் -சிறப்புரை :872
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.--- ௮௭
(வில் ஏர் உழவர் ; சொல் ஏர் உழவர்)
ஒருவன், போர்க் களத்தில் வில்லை ஏராகக் கொண்டு வினையாற்றும் வீரர்களோடு பகை கொண்டாலும் , சொல்லாகிய ஏரைக்கொண்டு புலமைக்களத்தில் வினையாற்றும் சான்றோர்களுடன் பகை கொள்ளாதிருக்க வேண்டும்.
“நில நலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம்
குல நலத்தால் ஆகுவர் சான்றோர். ---நாலடியார்.
நிலத்தின் வளத்தினால் பெருகிய நெல்லைப்போலத்  தம்முடைய இனத்தாரின் சிறப்பினால் ஒழுக்கமும் உயர்வும் பெற்றுச் சான்றோராகத் திகழ்வர்.


1 கருத்து: