90
– பெரியாரைப் பிழையாமை
திருக்குறள் -சிறப்புரை :891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றுலு ளெல்லாம் தலை. --- ௮௯௧
(போற்றலுள் எல்லாம்)
எடுத்த செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றலுடைய சான்றோர்களை
இகழாதிருத்தல், தமக்குத் தீங்கு வாராமல் பாதுகாத்துக்கொள்ளும் காப்புகள் எல்லாவற்றினும்
தலையாயது ஆகும்.
“ ஆற்றப் பெரியார் பகை வேண்டிக்
கொள்ளற்க”—பழமொழி.
வலிமையால் தருக்கித் திரிந்து, சான்றோரை இகழ்ந்து பகைத்துக் கொள்ளா விரும்பாமல்
இருப்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக