திருக்குறள் -சிறப்புரை :889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.---- ௮௮௯
(எள் பகவு அன்ன)
உட்பகை, எள் முனை அளவு மிகச் சிறிதாக இருந்தாலும் அது ஒரு குடும்பத்தை அழிக்கக் கூடிய
ஆற்றல் உடையதாம்.
“ தொல்லை வினையான் துயர்
உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன்
வாழியரோ.”—சிலப்பதிகாரம்.
பழைய ஊழ்வினை காரணமாகத் துயர் உற்றவளின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன்
உயிரைக் கொடுத்த மன்னர் மன்னன் பாண்டியன் வாழ்வானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக