திருக்குறள் -சிறப்புரை :881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.----- ௮௮௧
ஒரு பருவத்தில் நிழலும் நீரும் இனிமை உடையனவாக இருந்தாலும் பின்னர் நோய்
செய்வனவாகும் அதுபோல் சுற்றத்தார் இனியவரேயானாலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்வாராயின்
அவர்களும் விலக்கிவைக்க வேண்டிய தீயவர்களே.
“ சுட்டு அறிப பொன்னின்
நலம் காண்பார் கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன்.” –நான்மணிக்கடிகை.
பொன்னின் தரம் அரிய அதனை உருக்கி அறிவார்கள் ; உறவினரால் உண்டாகும் பயனைத்
தம்முடைய செல்வம் எல்லாம் அழிந்து வறுமையுற்ற போதுதான் அறிவார்கள்.
தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா. நன்றி.
பதிலளிநீக்குஐயா நன்றி
நீக்கு