திருக்குறள் -சிறப்புரை :890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. ---- ௮௯0
ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உடன்பட்டு வாழாதார் வாழ்க்கை ஒரு குடிசையுள்
பாம்புடன் சேர்ந்துவாழ்வதை ஒக்கும்.
“ தன் உடம்பு தாரம் அடைக்கலம்
தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு
இவை நான்கும்
பொன்னினைப் போல் போற்றிக்
காத்து உய்க்க..” –ஆசாரக்கோவை.
தன் உடம்பு, மனைவி, அடைக்கலமாக வைத்த பொருள், தானே முயன்று சேர்த்து வைத்த
பொருள் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப்போல் போற்றிப் பாதுகாத்துக்கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக