சனி, 5 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :867


திருக்குறள் -சிறப்புரை :867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.--- ௮௬௭
கூடவே இருந்து குழிபறிக்கும் அஃதாவது தன்னுடன் இருந்துகொண்டே  தனக்குக் கேடுதருவனவற்றைச் செய்பவனை ஏதாவது கொடுத்தாகிலும் அவனது பகையைக் கொள்ள வேண்டும்.
””கரப்புடை உள்ளம் கனற்றுபவரே
செருப்பிடைப் பட்ட பரல்”---பழமொழி.
பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர் செருப்பில் அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக