திருக்குறள் -சிறப்புரை :874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.----- ௮௭௪
பகைவரையும் நண்பராகக் கொள்ளும் பண்புடையாளனின் பெருந்தன்மையின் கீழ் இவ்வுலகமானது
நிலைபெற்றுள்ளது.
“….பகைவர் இவர், இவர் நட்டோர்
என்னும்
வகையும் உண்டோ நின் மரபு
அறிவோர்க்கே.” –பரிபாடல்.
இறைவா..! உன் இயல்பினை அறியும் அறிவர்க்கு உனக்கு யாவரும் சுற்றத்தார்
என்று கூறமுடியுமே ஒழிய, இவர் பகைவர் , இவர் நண்பர் என்று கூற இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக