சனி, 26 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :887


திருக்குறள் -சிறப்புரை :887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.---- ௮௮௭
செம்பும் அதன் மூடியும் இணைந்திருந்தாலும் ஒன்றோடொன்று வேறுபட்டதே அதுபோல உட்பகை உண்டான இல்லத்தில் அனைவரும் ஒன்றுகூடி இருந்தாலும் மனத்தால் வேறுபட்டே நிற்பர்.
“உலகு அறிய தீரக் கலப்பினும் நில்லா
சில பகலாம் சிற்றினத்தார் கேண்மை…” ---நாலடியார்.
உலகத்தார் அறியும்படி, நெருக்கமாக இருந்தாலும் அற்பர்களுடைய உறவு மிகக் குறுகிய காலமே நிலைத்திருக்கும்.


1 கருத்து: