வியாழன், 17 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :879


திருக்குறள் -சிறப்புரை :879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து. --- ௮௭
முள் மரம் இளையதாக இருக்கும் பொழுதே வெட்டி விட வேண்டும்; அதுவே மரமாகிவிட்டால் வெட்ட வருவோரின் கையைத் தீண்டி வருத்தும். (பகையைமுற்ற விடக்கூடாது.)
“ தன் பகை  கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ.” –புறநானூறு.
நலங்கிள்ளி, தன்னை வருத்தக் கருதும் பகையைப் போக்குவதோடு, தன்னைச் சார்ந்தோரின் பசியாகிய பகையையும் போக்குவதில் வல்லவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக