புதன், 2 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :864


திருக்குறள் -சிறப்புரை :864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.--- ௮௬௪
வெகுளியை அடக்க இயலாதவனாய் ; மனத்தை அடக்கி ஆளும் தன்மையற்றவனாய் ஒருவன் இருப்பானாயின் அவன் பகைவர்களுக்கு மட்டுமல்லாது எல்லார்க்கும் எளியன் ஆவான்.
“ஆறாச் சினத்தன் அறிவு இலன் மற்று அவனை
மாறி ஒழுகல் தலை என்ப…”—பழமொழி.
ஆறாத கோபத்தை உடையவன் அறிவு கெட்டவன் ஆவான்;  அவனோடு சேராது விலகி இருத்தல் நல்லது என்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக