புதன், 16 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :878


திருக்குறள் -சிறப்புரை :878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.--- ௮௭௮
பகையை எதிர்கொள்ளும் வகையறிந்து,  காலம், இடம் அறிந்து தன்னை நிலைப்படுத்தி,  தற்காப்பு முறையறிந்து செயல்பட்டால், வெற்றிகொள்ள முயலும் பகைவர்தம் செருக்கு, தானே அழிந்துபடும்.
“ பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
நாடு கவின் அழிய நாமம் தோற்றி.”  --பதிற்றுப்பத்து.
புலவர்கள் சிறப்பித்துப் பாடுதற்குரிய பயன் நல்கும் பகைவர் ஊர்கள் பலவும் நீ (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) சினந்து எடுத்த போரால் அவற்றின் அழகு அழிந்து அச்சம் தரத்தக்கனவாயின.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக