ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :841


85. புல்லறிவாண்மை
திருக்குறள் -சிறப்புரை :841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு. --- ௮௪௧
இல்லாமை பலவற்றுள்ளும் மிகக்கொடுமையான இல்லாமை என்பது அறிவு இல்லாமையே ஏனைய பொன்னோ பொருளோ இல்லாமையை இல்லாமை எனக் கருதாது இவ்வுலகம்.
“அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் ….” –பழமொழி.
அறிவினால் பெருமை பெறாத ஒருவன் பிற செல்வம் குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.

1 கருத்து:

  1. உங்களது பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா. தங்களின் பணி போற்றுதற்குரியது.

    பதிலளிநீக்கு