திருக்குறள் -சிறப்புரை :844
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. --- ௮௪௪
புல்லறிவு எனப்படுவது யாதென்றால் “யாம்” அறிவிற்சிறந்தோம் என்று தம்மைத்தாமே
போற்றி இறுமாப்புக்கொள்ளும் சிற்றறிவாம்.
“நில்லாத காட்சி நிறைஇல்
மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.”-இனியவை
நாற்பது.
தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி
இருத்தல் இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக