செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-15.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-15.

முனைவர் இரெ. குமரன்


அச்சுதக் களப்பாளன்



                                              அச்சுதக் களப்பாளன் களப்பிர மன்னர்களுள் ஒருவனாவான். மூவேந்தர்களையும் சிறை வைத்தவனெனக் கருதப்படுபவன் இவனாவான். தமிழ் நாவலர் சரிதை கூறுவது போன்று பாண்டிய நாடு இவனது ஆட்சிக்குக்கீழ் வந்தது. அமிர்தசாகரர், மற்றும் புத்ததத்தர் இருவரும் இவனைப் பற்றிக் கூறியுள்ளனர். புத்ததத்தர் அச்சுதக் களப்பாளன் தமிழகத்தினை ஆண்டதனால் உலகினை ஆட்சி செய்தான் எனப் புகழ்ந்தும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. புத்த சமயப் புலவர்களையும், புத்த மடங்களையும் இவன் ஆதரித்தான்.

                                  மூர்த்தி நாயனார் அச்சுத களப்பாளன் காலத்தில் வாழ்ந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை காலத்துப் பூதமங்கலம் பௌத்தர்களுடையது கி.பி. 660 ஆம் ஆண்டளவில் புத்த மதத்தினர் சம்பந்தருடன் வாதிட்டுத் தோற்றுப் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'புத்தர் விஹாரம்' களப்பிர மன்னனான அச்சுத களப்பாளனால் செய்யப்பட்டது. யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

                             களப்பாளர் என்பது கள்ளர் குலத்தின் பட்டபெயர்களில் ஒன்றாகும். கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனே அச்சுதக் களப்பாளன். இவன் காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. wikipedia [2]

                                 சோழநாட்டில் களப்பாள் என்னும் ஊரிலிருந்து அரசாண்ட மன்னன் அச்சுதக்களப்பாளன் என்றும் களப்பாள அரசன் மற்ற அரசர்களோடு போர்புரிந்து வெற்றி பெற்றான் என்பதை,

 

‘”படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடிவடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம். எனும் தனிப்பாடல் சுட்டுகின்றது.

 

                           கூற்றுவ நாயனார் என்பவர் சோழவள நாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களந்தையைத் தன் பெயரால் களப்பாளை ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவனென்னும் பெயர் பெற்றார்.” என்றும் கூறுவர். (திருக்களர் மு. சுமிநாத உபாத்யாயன்.)

…………………………………..தொடரும்………………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக