களப்பாளனாகிய
களந்தைக்
கூற்றுவன் -4.
முனைவர் இரெ. குமரன்
கன்னட
தேசத்தின் வரலாறு (கன்னட இதிஹாஸ தர்ஸன்)
எனும் நூலும் பழைய கன்னட சாசனமும் இப்போதைய சிரவணபெளகொள பகுதியே பழங்காலத்தில்
களபப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது என்றும் களபப்பு நாடு களவர ராச்சியம் என்பது
மைசூர் பிரதேசமே என்றும் கூறுகின்றன. களவர் நாடு,
களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன.
இச்சான்றுகளினால் கன்னட நாட்டவராகிய களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான
களப்பிர நாட்டை அரசாண்டனர் என்று தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ
கி.பி. 250இல் தமிழகத்தைக் கைப்பற்றி அரசாண்டனர்
என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
பல்லவராலும்
பாண்டியராலும் கி.பி. ஆறாம் நூற்றாண்டுமுதல்
ஒன்பதாம் நூற்றாண்டுவரை களப்பிரர் வலி குன்றிச் சிற்றரசர்களாக இருந்தனர். தஞ்சையை ஆண்ட களப்பிரர் பல்லவர்க்கு அடங்கியவர்; கொடும்பாளூரை
ஆண்ட களப்பிரர் பாண்டியர்க்கு அடங்கியவர். கி.பி 9ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சோழப் பேரரசை நிலைநாட்டிய
விசயாலய சோழன் தஞ்சையைக் களப்பிர அரசனிடமிருந்தே மீட்டான்.”
(புதுக்கோட்டை மாவட்ட வரலாறு
, டாக்டர் ஜெ. ராஜா முகமது, உதவி இயக்குநர், அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை – 2004.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக