களப்பாளனாகிய
களந்தைக்
கூற்றுவன் - களப்பிரர்-11.
முனைவர் இரெ. குமரன்
“களப்பாள்
என்னும்
திருக்களந்தை ஆதித்தேச்சுர
வைபவம்” (1941)
நூலாசிரியர்: திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயன்.
“களப்பாள் என்பது மரூஉமொழிபெற்று ‘களந்தை’ எனவும் இராசாதித்தேச்சரம் என்பது முதற்குறைபெற்று ‘ஆதித்தேச்சரம்’
எனவும் வழங்கலாயின.”
“இராசாதித்தன் வழிபாடு”
–இத்தலம் ‘இராசாதித்தன் என்னும் அரசன் உண்டுபண்ணி
வழிபட்டது.( கற்பக்கிரகம் பின்புறத்தில் இராசாதித்தேச்சுரம் என்றிருந்த
சிலாசாதனம் மறைந்து போயிற்று.)
”சைவ சமயம் தழைத்தோங்கற்பொருட்டுத்
திருவவதாரம் புரிந்து, தமிழ் வேதமாகிய தேவாரம், திருவாசகம் அருளிச் செய்த சமயகுரவர்களுள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார்
(சிவபெருமான் அடியெடுத்துக்கொடுக்க) திருவாய் மலர்ந்தருளிய
திருத்தொண்டத் தொகையினுள்
‘ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்’
எனவும்
திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாருக்கு
அமுதருத்திய சிவாநுபூதிச்
செல்வராகிய நம்பியாண்டார் நம்பி அப்பொல்லாப்பிள்ளையார் திருவருளால் அருளிய திருத்தொண்டர்
திருவந்தாதியினுள்
‘நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல
போதங்
கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப
ஓதந்
தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின்வைத்தான்
கோதை
நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே’
எனவும்
சைவசித்தாந்த
சாத்திர உபதேசஞ் செய்தற்பொருட்டு எழுந்தருளிய சந்தான குரவருள் ஒருவரும் தில்லைவாழ்
அந்தணருள் ஒருவருமாகிய உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருத்தொண்டர் புராணச் சாரத்தினுள்
“குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்
கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு
சூடப்
பொன்றாழு
முடிவேண்டப் புலியூர் வாழும்
பூசுரர்கள் கொடாது அகலப் புனிதன்
ஈந்த
மன்றாடும்
திருவடியே முடியாய்ச் சூடி
மாநிலங் காத் திறைவனுறை மாடக்கோயிற்
சென்றசை
யுடன் வணங்கிப் பணிகள் செய்து
திருவருளாலமருலகஞ் சேர்ந்து ளாரே.”
எனவும்
……………………………தொடரும்……………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக