களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-11.
முனைவர் இரெ. குமரன்
களந்தை- களப்பாள்- ஆதிதேச்சுவரர் கோயிலில்
இறைவரின்
திருப்பெயர்
: ஆதித்தேச்சுவரர்
இறைவியாரின்
திருப்பெயர்
: பிரபாநாயகி
வழிபாடாற்றியவர் : ஆதித்த சோழன், கூற்றுவநாயனார்.
இவ்வூரின்
சிறப்பு
: கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம் இக்களப்பாள் ஆகும். “கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூர்றுவனே” என்பது திருத்தொண்டர்
திருவந்தாதி.
கல்வெட்டு
வரலாறு
இவ்வூர்க் கோயில்களில்
12 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளுள் அழகியநாதசுவாமி
கோயிலின் இரு கல்வெட்டுக்களின்
மூலங்கள், தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளிவந்திருக்கின்றன.
அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகிறேன்…….
ஸ்வஸ்தி
ஸ்ரீ கோமாறுபன்மர் திரிபுவனச் சக்கரவர்த்திகள்
சிறிகுலசே
(க) ர தேவற்கு யாண்டு உயங [வது] உளச-ள் பங்குனி மீ களப்பாள்
உடையாற் திருவாதித்தீ [சு]ர முடையாற்கு
வாகூருடையார் பிள்ளை காடு [வெ] ட்டியார்
மகனார் சொக்க நாய [னா]ர் கட்டின சந்தி ஒன்று.
இவற்றால்
களப்பாள் என்பது ஊரின் பெயர் என்பதும் ஆதித்தேச்சரம் என்பது கோயிலின் பெயர் என்பதும்
புலப்படுகின்றன.
மேற்குறித்துள்ள
செய்திகள் ,
“ஒன்பதாம் திருமுறையில் உள்ள தலங்களின்
வரலாற்றுக் குறிப்புகள்”எனும் நூலில் இடம் பெற்றுள்ளன.
(நூலாசிரியர்: கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர்
வித்துவான் வை.
சுந்தரேச வாண்டையார்.)
ஊரின் பெருமைகளை தொடர்ந்து எழுதும் உங்கள் முயற்சி போற்றத்தக்கது. பல புதிய செய்திகளைத் தெரிந்துகொள்கிறேன்.
பதிலளிநீக்கு