தமிழர் ஓணநாள் விழா
”கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்
தார்
மாயோன் மேய ஓண
நல் நாள்,
கோணம் தின்ற
வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற
சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள்
சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற
வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர்
கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு
ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக்
காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங் கள்
தேறல் மகிழ் சிறந்து திரிதர”
--மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி: 590-599.
கரு நிறம் உடைய திருமால்
பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரிலுள்ளார் விழா
எடுப்பர்
;அவ்விழாவில் மறவர்கள் சேரிப்போர் நிகழ்த்துதல் வழக்கமாகும்.
யனைகளுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்தது. மறவர்கள், கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக, மகிழ்ந்து திரிந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக