களப்பாளனாகிய
களந்தைக்
கூற்றுவன் -7.
முனைவர் இரெ. குமரன்
களந்தை
--- களப்பாள்
” வேள்விக்குடிச்
செப்பேட்டின் (கி.பி.5) மூலம் களப்பிரர் என்ற அரசமரபினர் பற்றி அறிந்துகொண்ட பின்னர்தான் பெரியபுராணத்தில்
கூறப்படுகின்ற மூர்த்தி நாயனார் கதை களப்பிரர் காலத்தில் நடந்தது என்றும் கூற்றுவ நாயனாரும்
ஒரு களப்பிர அரசன் என்றும் ஆய்வாளர்களால் கூறமுடிந்தது.
நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டர் திருவந்தாதியில் “களப்பாளனாகிய கூற்றுவனே”
எனக்கூறுகிறார்.
சுந்தரர்,
திருத்தொண்டத் தொகையில் “ ஆர்கொண்ட வேர் கூற்றன்
களந்தைக் கோன் அடியேன் ”என்றும்….
உமாபதி
சிவாச்சாரியார், திருத்தொண்டர் புராணத்தில், ”…… களந்தை வேந்தன்; கூற்றுவனார் மாற்றலர் மண்கொண்டு…”
என்று கூறுவார்.
களப்பாள்
ஆதியப்பப் புலவர் களப்பாள் சிவன் கோயில் தலபுராணமும் திருக்களர் தலபுராணமும் இயற்றியுள்ளார்.”
தருமபுரம் ஆதினத்தில் குருமூர்த்தமாயெழுந்தருளியிருந்த அழகிய சிற்றம்பல
தேசிகர் என்பவருடைய மாணாக்கர்களுளொருவரும் அக்காலத்தில் இத்திருத்தலத்திற் கட்டளைத்
தம்பிரானாயிருந்த வருமாகிய சரவண தேசிகர் கட்டளையிட்டருளியவாறு திருக்களந்தை
(களப்பாள்) ஆதியப்பப் புலவர் தமிழில்
411 செய்யுள்களாகப் பாடியருளினார்.
“ கருணைமிகு நந்தியுரைப்படி சூதமாமுனிவன்
கழறுமாறே
தருமைவரு மழகிய சிர்றம்பல சற்குருவருளே
தரித்து நாளு
முருகனெனக் கலையுணர்ந்த சரவண முனியருளான் மொழி கென்றோத
விருநிலத்தி லுயர் களந்தையாதியப்பன்
பசுந்தமிழாலியம்பல் செய்தான்.”
இவ்வாறு
ஆதியப்பப்புலவர் இயற்றிய திருக்களர் தலபுராணத்தை த் தவத்திரு மாதவராயர் அவர்கள்
1902 ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்………………..தொடரும்…………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக