ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-13.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-13.

முனைவர் இரெ. குமரன்

 

திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞான சுவாமிகள் அருலிச் செய்த திருத்தொண்டர் திருநாமக் கோவையுள்

 

விறற் களந்தைக் கூற்றுவனார் எனவும்

 

சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் பெரியபுராணத்துள்

துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப் படையார்

நன்னாமம் அந்தத் திருநாவினாலும் நவிலும் நலமிக்கார்

பன்னாள் ஈசனடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி

முன்னானாகிய நற்றிருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.” எனவும்

 

மல்லன் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத்

தில்லைவாழ் அந்தணர் தம்மை வேண்ட அவருஞ் செம்பியர்தந்

தொல்லை நீடுங் குலமுதலோர்க்கன்றிச் சூட்டோம் முடியென்று

நல்காராகிச் சேரலநன்தன் மலைநாடு அணைய நண்ணுவர்  எனவும் சேக்கிழார் கூற்றுவநாயனார் குறித்துக் கூறுவார். கூற்றுவர்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'களப்பாளர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். 

…………………………………………….தொடரும்………………………………..           

2 கருத்துகள்: