களப்பாளனாகிய
களந்தைக்
கூற்றுவன் - களப்பிரர்-26.
முனைவர் இரெ. குமரன்
1946- சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு, அன்றுதான்…..
அடக்குமுறையால்
அழுத்தப்பட்டுக் கிடந்த அடிமைச் சமுதாயம் சினந்து…..கனன்று கிடந்த எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. அதற்குப்
பெயர்தான் ‘களப்பாள் கலவரம்.’.
ஏழைகள்
எரிமலை என்பதை அறியாது எருமை மாடுகள் என்று எண்ணி ஏறி விளையாடிய பண்ணை முதலாளிகள்,
எரிமலையின் மீது விழுந்த பஞ்சுப் பொதிகளாயினர்.
மண்ணுக்குத் தெரியும் தனக்குச் சொந்தக்காரன்
யாரென்று! மண்ணோடு பிறந்து, வளர்ந்து,
வாழ்ந்து உறவு கொண்டவன் பண்ணைகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர்
நிலங்களைக் கண்ணால் அல்ல, காலால் அடி அடியாக அளந்து உழுதுகளைத்தவன்
இன்றும் அந்த மண்ணிலே! அந்த மண்ணைக் காலால் அல்ல, கன்ணால் கூட அளக்காதவர்கள் சொந்தம் கொண்டாடி இன்று எங்கோ தொலைந்து போனார்கள். அவர்கள் வாழ்ந்து மறைந்த வழியில் புழுதி படிந்த அந்தத் தடத்தின் பழைய வரலாறு….!
இந்த
வரலாறு ஓர் உண்மையை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. இனி…..
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியாது எரிமலையைத்தான் காணமுடியும்.
உலகம் முழுவதும் அழுது புலம்பிய ஆயிரமாயிரம்
ஏழைகளின் கண்ணீரைத் தன் ஒர்றை விரலால் துடைத்தெறிந்த அந்த மேதை அன்றே சொன்னான்,
“முதலாலீத்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்கிறது”
என்று! இந்த உண்மை வரலாற்றில் காலந்தோறும் மெய்ப்பிக்கப்பட்டுக்
கொண்டே வருகிறது. அதற்கு இன்னுமொரு சான்று களப்பாள்தான்.
…………………………………………தொடரும்………………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக