செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் -8.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் -8.

முனைவர் இரெ. குமரன்

களப்பாள் என்னும் களந்தை

 

களந்தை:  சோழநாட்டு ஊர்டி.வி. சதாசிவ பண்டாரத்தார்

களந்தை :  தொண்டைநாட்டு ஊர், கே.கே.பிள்ளை.

களந்தை :  பாண்டிய நாட்டு ஊர், - கரவந்தபுரம் என்ற பெயர் கொண்ட களக்குடியே களந்தை என்றார்நடன. காசிநாதன்.

 

சோழநாட்டில் களப்பாள்

 

                     செங்கற்பட்டு ஜில்லா, செங்கற்பட்டு தாலுகாவில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒருசாராரும் தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டித் தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ர ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும்  கோயமுத்தூர் ஜில்லா, பொள்ளாச்சித் தலுகாவில் உள்ள பெரிய களந்தை என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். இவைகளின் வன்மை மென்மைகள ஆராய்வாம்.

 

                                   பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டலசதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க்கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஆதலால், இக்களத்தூர் திருவிசைப்பாப்பெற்ற கோயில் களந்தை ஆகாது……………….தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக