களப்பாளனாகிய
களந்தைக் கூற்றுவன்
-3
முனைவர் இரெ. குமரன்
வேள்விக்குடிச் செப்பேடு,
தளவாய்புரச் செப்பேடு ஆகியவற்றை
ஆராய்ந்த அறிஞர் மயிலை சீனி.
வேங்கடசாமி வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச்
செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது. “கடிராறு கவனலங்கல் களப்பாழர்
குலங்கலைந்தும்” என்றும் “ களப்பாழரைக்
களைகட்ட மற்றிரண்டோன் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்” என்று தளவாய்புரச் செப்பேடு (வரி, 131-132) கூறுகிறது. எனவே களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்று
கூறுகிறார்.
மேலும் அறிஞர்
மயிலை சீனி.வேங்கடசாமி “ களப்ரர்,
களப்பரர், களப்பிரர், களப்பாளர்,
களப்பாழர் என்றெல்லாம் அழைக்கப்படுவோர் களப்பிரர்களே. இவர்கள் தமிழர் அல்லர் திராவிட இனத்தைச் சார்ந்த கன்னட வடுகர்.” என்றும் கூறுகிறார்.
ஆயினும்
சிலர் களப்பிரர் தாய்மொழி கன்னடம் அல்ல என்றும் பாலிபிராகிருதம் அவர்தம் தாய்மொழி என்றும்
கூறுவதை இவர்கள் மறுக்கிறார்கள்.
’வேள்விக்குடிச் செப்பேடு “ அளவரிய ஆதிராஜரை
அகல் நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலி அரைசன் கைக்கொண்டான்” என்று கூறுகிறது. மூவேந்தர்களையும் வென்று ஈழத்தையும்
வென்று சுமார் முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் குறித்து அறிந்து
கொள்ள, போதிய சான்றுகள் இல்லை. வரலாற்றுச்
சுவடுகள் எதுவுமே இல்லாமல் தமிழகம் இருந்திருக்கிறது, அப்படியெனில்
களப்பிரர்கள் கலகக்காரர்களா
/ அரச மரபினர்களா..? ………………..தொடரும்………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக