செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் -1

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் -1

முனைவர் இரெ. குமரன்

 

களப்பிரர் வரலாறு

                            தமிழக வரலாற்றில்இருண்ட காலம்என்று ஒரு காலப் பகுதியை வரலாற்றறிஞர்கள் சுட்டுகின்றனர். இது, கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியாகும். கி.பி. 250 முதல் 550 வரை தமிழகத்தைக் களப்பிரர்கள் அரசாண்டனர் என்பர்.

                                         கடைச்சங்க காலத்தின் இறுதியில் அரசாண்ட சேர அரசன் கோக்கோதை மார்பன், கொங்கு நாட்டை ஆண்ட கணைக்கால் இரும்பொறை, பாண்டிய நாட்டை ஆண்ட தலையாலங்கானத்துச் செருவெண்ற நெடுஞ்செழியன், சோழ நாட்டை ஆண்ட செங்கணான் ஆகிய அரசர்களைப் போரிலே வென்று சேர சோழ பாண்டிய நாடுகளோடு துளு நாடு, கொங்கு நாடு, இரேணாடு ( பல்லவ நாட்டின் ஒரு பகுதி) ஈழ நாடு ஆகியவற்றையும் களப்பிரர் கைப்பற்றினர் என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

மேற்குறித்துள்ள நாடுகளையெல்லாம் களப்பிரர்கள் வென்றார்கள் என்பது உண்மையாயின் , களப்பிரர் நிகழ்த்திய போர் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு குழு (படை)  தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும்.ஒரே குழு அத்தனை நாடுகளையும் ஒரே காலக்கட்டத்தில் போர் தொடுத்திருக்க முடியாது. அந்த அளவிற்கு மூவேந்தர்கள் மிகவும் எளியவர்களா? அல்லது களப்பிரர்கள் வலிமைவாய்ந்த பேரரசர்களா இருந்தனரா ? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். பேரரசர்களுக்குப் படைஉதவி புரிவோர் சிற்றரரசர்களே .  அந்தந்த நாட்டிலிருந்த சிற்றரசர்கள் (களப்பிரர்கள்) ஒன்றுகூடிப் போர் நடத்தினராதல்வேண்டும் .    அந்தவகையில் சோழ நாட்டைக் களப்பிரச் சிற்றரசன் கூற்றுவன் போரிட்டு வென்றெடுத்தான் என்று கருத வேண்டியுள்ளது.  எனினும் கூற்றுவனார் மூவேந்தரையும்  வென்றதாகச் சான்றுகள் உள்ளன. அவையும் வரலாற்றாய்வுக்கு உட்பட்டவையே. …………………தொடரும்………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக