ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் -6.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் -6.

முனைவர் இரெ. குமரன்

 

                     தமிழ்நாட்டுச் சிற்றரசர்கள் கருநாடகத் தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்து மூவேந்தர்களை எதிர்த்து வென்று  புதிய ஆட்சி அமைத்தனர். இந்தக் கூட்டணியே களப்பிரர்கள் எனப்பட்டனர்.

 

                                சங்க காலச் சோழன் காலத்தில் வடபுலத்திலிருந்து வடுகரும் தென் புலத்திலிருந்து பரதவரும் தமிழகத்திற்குள் புகுந்து குறும்பு செய்து வந்தனர். இவ்வடுகரே இடைக்காலப் பல்லவ,பாண்டியர் காலத்தில் சீரழிந்து வலியழிந்தொழிந்த களப்பிரராவர். வடபுலத்திருந்த வடுகரே களப்பிரர்.

 

தென் புலத்தவர் மிடல் சாய

வடவடுகர் வாளோட்டிய

தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைபுறநானூறு,378, ஊன்பொதி பசுங்குடையார்.

                    தென்னாட்டிற் புகுந்து குறும்பு செய்த  பரதவருடைய வலிகெட்டொடுங்க; வடநாட்டினின்றும் போந்து குறும்பு செய்த வடுகரது ( வடுகர்தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால்  வடுகர் எனப்பட்டனர்.) வாட்படையைக் கெடுத்தழித்த , மாலையணிந்த, திருந்திய வேலேந்திய பெரிய கையையும் உடைய  சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட் சென்னியை வாழ்த்திப் பாடியது.

 

                  வடபுலத்திருந்த வடுகரே களப்பிரராவர் என்கிறார் உரை வேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை…………………தொடரும்……………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக