இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…1.
”அறம் செய விரும்பு”.
எவ்வுயிர்க்கும்
நன்மையானவற்றைச் செய்ய விரும்புவாயாக.
நீதி
வழுவா நெறிமுறையின் இயங்குவது –அறம். சாதி, மதம், மொழி, நிறம்,
மேலோர், கீழோர் என இன்னபிற வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களுக்கும் வகுத்தளித்த,
பொதுவானதோர் ஒழுக்கக் கோட்பாடாகும்.
தர்மம் என்றது, அனைத்து மக்களுக்கும் பொதுவானதன்று,
சாதி, மதம், குலம், மேலோர், கீழோர் என இன்னபிற வேறுபாடுகளைக் கொண்ட மக்கள், தங்கள்
வாழ்க்கையில் பின்பற்றும் சாதி, மத கோட்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடுவதாகும்.
கம்பராமாயணத்தில் வாலி, சுக்ரீவன் மனைவியைக் கவர்ந்து
கொண்டது “எங்கள் குல வழக்கமே, இராமா..! உன் குல வழக்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை “என்று
கூறுவான்.
தமிழ் அறம்: எவராயினும் ”பிறன் மனை நயத்தல்” பெருங் குற்றமே என்று பேசும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக