இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…13.
ஒளவையார் அருளிய மூதுரை
“
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று
தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா
வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே
தான்தருத லால்.”
தென்னைமரம்
வேரால் உண்ட நீரை இனிய சுவையுடைய இளநீராக்கி முடியாலே தருகின்றது. அதுபோல, நாம் பிறர்க்குச்
செய்யும் உதவி
நமக்குத் தவறாமல் வந்து சேரும். ஆதலால் என்றும் நன்மையே
செய்க.”
உரை: பேரறிஞர் முனைவர் வ.
சுப. மாணிக்கனார்.
இணைப்பு
“முன்னொன்றுதமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின்னொன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர்…” –பாலைபாடிய பெருங்கடுங்கோ
; கலித்தொகை., 34.
முன்பு
தனக்கு உதவி செய்தவர் வறுமையுற்ற பொழுது மறவாது அவர்க்கு அந்த உதவியைத் திருப்பிச்
செய்யும் நல்லோர் பெருமை உடையவர் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக