இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…7.
” கேள்வி முயல் ”-–ஒளவையார்,
ஆத்திசூடி
நல்ல கருத்துக்களை விரும்பிக் கேட்க முயல வேண்டும்.
கல்வி கற்கும் மாணவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை விருப்பத்துடன் கேட்டு மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.திருவள்ளுவர் கூறுகிறாரே…”செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் …..!” என்று,
நல்லோர் கூறும் கருத்துக்களைச் செல்வமாகப் போற்றத்தக்க
செவிகள் வழி அறிந்துகொள்ள ஒருவன் முயல்வானாகில் அவன் கல்வியறிவு இல்லாதவனாயிருந்தாலும்
கற்றவனாகவே கருதப்படுவான் என்கிறார் திருவள்ளுவர், ”கற்றிலனாயினும் கேட்க….” அப்படிக்
கேட்டு நன்மை, தீமைகளை ஆராய்ந்து தெளிவு பெறவேண்டும் .
எப்படி எனில் ..
”எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க
அன்னை, தந்தை, ஆசிரியர், கற்றோர் முதலியோர்
கூறும் நல்ல கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டுப் பயன் பெறலாமே…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக