இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…14.
ஒளவையார் அருளிய மூதுரை.
இளமையில் வறுமை
“இன்னா
இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா
அளவில் இனியவும் – இன்னாத
நாளல்லா
நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா
மங்கைக் கழகு.”
காலமல்லாத காலத்தில்
பூத்த மலரும் கணவன் இல்லாத பெண்ணின் அழகும் பயன்படாவாம். அவைபோல, இளமையில் வறுமையும்
முதுமையிற் செல்வமும் பயன்படாவாம் ; துன்பம் செய்யும்.”
உரையாசிரியர்
: பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.
இணைப்பு:
“திருடாதே
பாப்பா திருடாதே
வறுமை
நிலைக்குப் பயந்து விடாதே
திறமை
இருக்கு மறந்துவிடாதே (திரு)
சிந்தித்துப்
பார்த்து செய்கையை மாத்து – தவறு
சிறுசாய்
இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும்
தெரியாமே நடந்திருந்தா – அது
திரும்பவும்
வராமே பாத்துக்கோ (திரு)
…………………………………..
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: படம் – திருடாதே,
1961.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக