இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…4.
ஞயம்பட
வுரை: அன்னை, தந்தை, சிறியோர், பெரியோர் என அனைவரிடத்தும்
இனிமையாகப் பேசு.
”முகத்தான்
அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொல்
இனிதே அறம்” – (93 )என்கிறார் திருவள்ளுவர். எவரையும் வெறுப்புடன் பார்க்காது முகமலர்ச்சியுடன் பார்த்துப் பின் மனமகிழ்ச்சியுடன் இனிய சொற்களைச்
சொல்லுதலே நற்பண்பாகிய அறமாகும்
“இன்சொலால்
அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் ஒன்றும்
மகிழாதே – பொன்செய்
அதிர்வளையாய்
பொங்காது அழல் கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்கும் கடல்” – சிவப்பிரகாசர், நன்னெறி.
ஒலிக்கின்ற வளையல்
அணிந்த பெண்ணே…! குளிர்ச்சி பொருந்திய நிலவின் வரவால்தான் கடல் பொங்கும் ; சுடும் சூரியன்
வரவால் கடல் பொங்காது. அது போல மக்கள் இனிய சொற்களைக் கேட்டு மகிழவர் ; கடுமையான சொற்களைக்
கேட்டு ஒருபோதும் மகிழ மாட்டார்.
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
பதிலளிநீக்குஇன்சொல் இனிதே அறம்
அருமையான குறள் புன்முறுவல் பற்றியும், அகத்திலிருந்து வரும் இன்சொல் பற்றியும் கூறும் இக்குறளை மறக்க முடியாது. இக்குறளை உளத்தில் கொண்டு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ்பவர் ஆவர்.!