இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…16.
ஒளவையார் அருளிய மூதுரை.
உயிரினும் மானம் பெரிது
“உற்ற
இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக்
கண்டாற் பணிவரோ – கற்றூண்
பிளந்திறுவ
தல்லாற் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து
வலையுமோ தான்.”
கல்லால்
ஆகிய தூண் பெரும் பாரம் தாங்க நேர்ந்தால் வளையாமல் பிளந்து முறியும். அதுபோல், மானம்
உடையோர் மானக்கேடு வருமிடத்து உயிரைவிட்டு மானத்தைக் காப்பர்.
உரையாசிரியர்
: பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.
இணைப்பு:
“மயிர்நீப்பின்
வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர்
மானம் வரின்.-குறள். 969.
பனிமலையில்
வாழும் கவரிமா எனும் விலங்கு,,தன் உடம்பினின்றும் மயிர் நீங்கின் உயிர் வாழாது. அதுபோல்,
தன்மானம் உடையோர் தமக்கு மானக்கேடு வருமாயின் வாழ விரும்பாது உயிரை விட்டுவிடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக