இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…11.
” மீதூண் விரும்பேல் ”-–ஒளவையார்,
ஆத்திசூடி
அளவுக்கு
மேல் உண்ண விரும்பாதே.
அளவுக்கு
விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு :
கிடைத்தற்கரிய அமிழ்தமே கிடைத்தாலும் அளவுக்கு அதிகமாகத்
தின்றால் அவ்வமிழ்தமும் நஞ்சாகி உயிரைப் பறித்துவிடும்
என்பதை வாழ்வில் எந்நாளும் மறக்காதே.
‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.(941)
திருவள்ளுவர்
வழி நின்று நூறாண்டு வாழலாம், நம் உடல்அமைப்பே (நிலம், நீர், தீ, வளி, விசும்பு ) இவ்வைந்தும் கூடி
அமைந்துள்ளது. இஃது இயற்கை அமைத்த விதியாகும்
நம் உடலில் வாதம் , பித்தம் ஐயம் ஆகிய மூன்றும் உயிர்
வாழ்தற்குரியவையாகும். இவற்றுள் எந்த ஒன்றும் கூடினாலோ / குறைந்தாலோ உடலை நோய் வருத்தும். அதனால், நம் உடலுக்கு நலவாழ்வு
அளிக்கும் எந்த ஒன்றும் அளவுடன் இருந்தே ஆகவேண்டும்.
உடற்பயிற்சி
செய்யலாமா..? கட்டாயம் செய்ய வேண்டும் உண்மைதான் அதிலும் அளவுண்டு. உடற்பயிற்சி கடுமையாகச் செய்யக்கூடாது
; செய்யாமலும் இருக்கக் கூடாது ; உடல் தகுதிக்கேற்ப அளவோடு செய்தல் வேண்டும்.
இப்படி
எந்த ஒன்றிலும் மிகாமலும் குறையாமலும் கவனமுடன் இருந்தால்
நூறாண்டு
வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக