வியாழன், 17 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 57. கலைஞர் கருணாநிதி.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 57. கலைஞர் கருணாநிதி.

எத்திக்கும் புகழ் மணக்கும்

தித்திக்கும் செம்மொழியே..!

கலைஞரின் எழுதுகோல்தானே செந்தமிழைச்  செம்மொழி என்று எழுதியது.

அன்றைய ஒன்றிய அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவிக்க மாண்புமிகு மேனாள் முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் விளைவே காலத்தால் அழியாத ; அழிக்க முடியாத கன்னித் தமிழை ஒன்றிய அரசு,  செம்மொழிப் பட்டியலில் முதல் மொழியாக அறிவித்தது.

 கலைஞர் அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டி, திருமதி சோனியா காந்தி அவர்கள் எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு.

November 8, 2005.

Dear Thiru Karunanidhi ji,

I have received  your letter of 28th  October. I am glad that all the formalities for declaring Tamil as a Classical Language  have now been completed. This is an achievement for all the constituents  of the UPA Government , but particular credit goes to you and your party.

With Regards

Yours Sincerely

Sonia Gandhi

தலைவர் கலைஞர் அவர்களின் பெரு  முயற்சியால் செந்தமிழுக்குச் செம்மொழி எனும் தகுதியை ஒன்றிய அரசு வழங்கியது.  கலைஞர் அவர்கள் தமிழைச் செம்மொழியாக்க எடுத்துக்கொண்ட  முயற்சிகள்  பெரும் போராட்டமாக அமைந்திருந்தன.  அவர் போராடிப் பெற்ற வரலாற்றைச் “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” எனும் தலைப்பில் ‘முரசொலியில்’ எழுதினார்.

                     கலைஞர் ஆற்றிய  அரும்பெரும்பணிகளைப் போற்றிச் ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்  பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய  பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்,   கலைஞரின் களவெற்றியை உலகம் அறியவேண்டும் என முடிவு செய்து,  கலைஞரின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக