செவ்வாய், 22 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 61. காரல் மார்க்சு .

 

சான்றோர் வாய் (மை) மொழி : 61.  காரல் மார்க்சு .

 

                     காரல்  மார்க்சு : 19 ஆம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி சமயக் கருத்துகள் பலவற்றைப் பொய்ப்பித்தது. அறிவியல் ஆய்வுமுறைகள் வளர்ந்தன. சமுகவியல் அறிவியல் அறிஞர்கள் பொருளியல் சிந்தனைக்கு ஊக்கமளித்தனர்.

காரல் மார்க்சு பொருளியத்திற்கு அதன் சமுக வெளிப்பாடான பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் அறிவியல் முறையிலான விளக்கமளித்தார். இதுவே மாபெரும் மக்கள் இயக்கமாக மலர்ந்தது. செர்மனியில் பிறந்து இலண்டன் மாநகர நூலகத்தில் அறிவைத் திரட்டி இரசியாவில் செயல்முறைப்படுத்தபட்ட கொள்கைக்குரியவர்.

                     தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையேயுள்ள  போராட்டங்களை எண்ணினார். ஓயாத சிந்தனை, உறக்கமற்ற இரவுகள் எகலின் தத்துவங்களைக் கற்றுணர்ந்தார். ’மெய்யானவை ஒவ்வொன்றும் அறிவுப்  பூர்வமானது ; அறிவுப் பூர்வமானவை அனைத்தும் மெய்யானவை ‘ என்பது எகலின் கொள்கை.

                     1837இல் மார்க்சு எழுதிய ஒரு பரிகாசக் கவிதையில் “ காண்ட்டும் பிக்டேயும் தொலைதூரத்தில் உள்ள உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள் ; நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன் அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்.

                           மார்க்சு வாழ்க்கையில் இருநபர்கள் மிகவும் அசாதாரண பாத்திரத்தை வகித்தனர். மனைவி ஜென்னியின் காதலும் எங்கெல்சின் நட்பும் வாழ்க்கையில் மார்க்சுக்குக் கிடைத்த சிறந்த கொடைகளாகும்………………………..தொடரும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக