வியாழன், 24 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 62. காரல் மார்க்சு .

 

சான்றோர் வாய் (மை) மொழி : 62.  காரல் மார்க்சு .

1845இல் எங்கெல்ஸ் பிரசுலெசு வந்துசேர்ந்தார் இருவரும் அரசியல் பொருளாதார பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தனர். இது குறித்து ஒரு பெரிய நூல்  எழுத வேண்டுமென்று மார்க்சு திட்டமிட்டுப் புத்தகக் கடலில் மூழ்கினார். கம்யூனிஸ்டு அறிக்கை (Communist Manifesto)  பின்னாளில் வெளியானது.

 மார்க்சு- எங்கெல்சு பொதுவுடைமைக் கோட்பாடுகளை விளக்கி வந்தனர். இந்தக் காலத்தில் பிரவ்தானுடைய “வறுமையின் தத்துவம்” என்ற நூலுக்கு மறுப்பாக மார்க்சு எழுதிய “தத்துவத்தின் வறுமை” எனும் நூலாகும். இருவரும் இலண்டன் சென்று பொதுவுடைமைத் தத்துவங்களைத்  திரட்டினர்.இக்காலத்தில்தான் “பொடுவுடைமைக் கழகம்”   ( Communist  League) தோன்றிற்று.

1847இல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது பொதுவுடைமை மாநாட்டில் மார்க்சு கலந்துகொண்டு பொதுவுடைமைக் கட்சியின் நோக்கங்களை விளக்கினார். கம்னியூஸ்டு அறிக்கை வெளியான சிலநாட்களுள் பாரிசில் ஒரு புரட்சி உண்டாயிற்று.

 1848ஐ புரட்சிகளின் ஆண்டு எனக்குறிப்பிடுவர். உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். வியன்னா(ஆசுதிரேலியா) பெர்லின் (செர்மனி) இத்தாலி,போலந்து, இங்கிலாந்து, பிரசெல்சு தொழிலாளர்கள் ஆயுதமேந்தி களத்தில் குதித்தனர்.

பிரெஞ்சி புரட்சி வெற்றி – மார்க்சு மீண்டும் பாரிசு வந்தார்.                          1848 ஏப்ரல் முதல் நாள் பிரெஞ்சியிலிருந்த செர்மன் பட்டாளம் செர்மனியில் நுழைந்தது ஆனால் தோல்வியுற்றது. மார்க்சு நினைத்தபடியே நடந்தது.

……………………..தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக