வெள்ளி, 25 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 63. காரல் மார்க்சு .

 

சான்றோர் வாய் (மை) மொழி : 63.  காரல் மார்க்சு .

மார்க்சீயம்:

மார்க்சீயம் என்பது ஆழமான மனித நேயம் – மனித நேயக் கோட்பாடு.  இயற்கை அறிவியல், சமுக அறிவியல், இவற்றின் வளர்ச்சி -  முற்போக்கு நடவடிக்கைகளை உள்ளடக்கமாகக்கொண்டு இயங்கியல் பொருள்முதல் வாதம் என்னும் முரணற்ற தளத்தின் மேல் காரல் மார்க்சு- எங்கெல்சு எழுப்பியதே மார்க்சீயம். – மார்க்சீயம் சமுகம் பற்றிய அறிவியல் – மார்க்சின் ஆய்வு மானுட விடுதலையைப் பற்றியதே. மார்க்சீயம் பெருவாரியான உழைக்கும் மக்களுக்குத் தொலைநோக்கோடு முரண்பாடின்றி நடைமுறைப்படுத்த இயலும் என்பது மார்க்சீய-லெனினிய உண்மை.

அடிப்படைக் கொள்கைகள்:

அ)  மனிதப் பெருமையை மதித்து உறுதி செய்தல்.

ஆ)  எந்த மதிப்பும் மனிதனைக் காட்டிலும் பெரிதல்ல என்று புரிந்துகொண்டு, மனித அறிவையும் மனித வாழ்வின் தொடர் வளர்ச்சியில் உரிமையையும் அங்கீகரித்தல்.

இ)  உழைக்கும் மக்களை உதவியற்றுப் போகச்செய்யும் சுரண்டல் பொருளாதார சமுக அமைப்பினை முற்றிலுமாக அறிந்து மாற்றி அமைத்தல்.

ஈ)  எதிர்காளத்தையும் வாழ்க்கையையும் ஐயப்பாட்டிற்கு இடமளிக்கும் அனைத்தையும் மாற்றி அமைக்க பெருவாரியான மக்களை எழுச்சியுடன் அதில் பங்கு கொள்ளவும் பயிற்றுவிக்கவும் ஈடுபாடு கொள்ளவும வழிமுறைகளை அமைத்தல்.

உ) பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் வழி தனியுடைமை அமைப்பினைத் தூக்கி எறிந்து ஆட்சி அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் வென்று பெற கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை உணர்த்துதல்.

ஊ)…..

……………………..தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக