சான்றோர்
வாய் (மை) மொழி
: 65. காரல் மார்க்சு
.
“உலகில்
பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளில் பற்பலத் தத்துவங்கள் தோன்றியுள்ளன. அவை பிரபஞ்சத்தை
விளக்குகின்றன. ஆனால், இன்றைய கேள்வி பிரபஞ்சத்தை எப்படி மாற்றுவது என்பதேயாம்.
மார்க்சீயம் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்கெனவே தயாரித்த பதில்களைத்
தருகின்ற தத்துவமல்ல. பிரபஞ்சத்தைப்பற்றிய தத்துவரீதியான மாதிரிப் படிவமல்ல, ’கட்டாயமான’ வரலாற்றுத்திட்டமல்ல.
நிரந்தரமான வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உட்படுகின்ற ஒன்றை அறிகின்ற முறையே மார்க்சீயம்.
மக்கள்
அனைவரையும் சமமான நிலையில் வைத்து நடத்தும் ஒரு புதிய சமுதாய அமைப்பை உருவாக்க வழிகாட்டுவதே மார்க்சீயம். அது சமுகத்தில் இடம்பெற்றுள்ள
வகுப்புகளையும் சாதி போன்ற பிரிவுகளையும் ஒழிக்கவல்லது. தன் வாழ்க்கையில் செய்ய வேண்டிய
அளவு வேலையை ஒருவன் செய்த பிறகு உழைப்பதிலிருந்து ஒதுங்கி ஓய்வு பெறும் தகுதி உடையவனாகிறான். அப்பொழுது
அவனுக்குச் சமுக பாதுகாப்பை அளிக்க முயலுவது எதுவோ அதுவே மார்க்சீயம்.”
முடிவுரை.
“ஜென்னி மார்க்சு மரணமடைந்து ஒரு வருடத்திற்குப் பிறகு 1883- மார்ச்சு – 14 ஆம் நாளன்று காரல் மார்க்சி இறந்தார்.
“மனித குலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை.”
–எங்கெல்சு.
“தத்துவம், என் நண்பரே நரை கண்டது ; வாழ்க்கை எனும் கற்பகத்தரு என்றும் பசுமையானது.” கேதே
..பாவுஸ்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக