ஞாயிறு, 20 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 59. பரஞ்சோதி முனிவர்

 

சான்றோர் வாய் (மை) மொழி : 59.  பரஞ்சோதி முனிவர்

                 நூற்குறிப்பு :  பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் , மூன்று காண்டங்களையும் ( மதுரைக்காண்டம், 18, படலங்கள், கூடற்காண்டம், 30 படலங்கள், திருவாலவாய்க்காண்டம், 16 படலங்கள் ) 3363, விருத்தப் பாக்களையும் கொண்டது. மதுரையில் விளங்கும் சோமசுந்தரக் கடவுள் தன்னுடைய அடியவர்களுக்கு அருள்புரிந்த சிறப்பினை விளக்குவதாக அமைந்துள்ளது.

41. விறகு விற்ற படலம்.

பாடல் தொழில் குற்றங்கள்

”வயிறு குழிதல், அழுகை முகம் காட்டல், புருவம் மேலே ஏறுதல், தலை நடுங்குதல், கண் ஆடல், மிடறு வீங்குதல்,  வாயைப் பை போன்று திறத்தல், பற்கள் தெரியக் காட்டுதல், ஆகியவை உடல் குற்றங்கள்.

                            இசைக்குற்றங்கள் : வெள்ளோசை, பேய் போன்று கத்துதல்,  குறைந்த ஓசையில் நிற்றல், வெடித்த குரலில் பாடுதல், நாசியில் இழைத்துப் பாடுதல், ஓரிடத்தில் நின்று இரட்டித்துக் கூறுதல், அளவு கடந்து நீண்டு மெலித்தல், இளைப்புக்கொண்டு நெடுமூச்சு விடுதல் இவை யாவும் பாடல் தொழில் குற்றங்களாகும்.

                   பாடகர், எழுதின சித்திரம் போன்று விளங்கிப் பாடுதல் வேண்டும்  என்பதற்கு இறைவனே சான்றாவான்.

பாணபத்திரனுக்காக  இறைவனே…. . பருந்தைத் தொடர்ந்து அதன் நிழல் செல்வதைப் போன்று யாழ் ஒலியுடன் இயைந்து பாடினான்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக