சான்றோர் வாய் (மை)
மொழி : 64. காரல் மார்க்சு .
ஊ)
சுரண்டப்படும் வர்க்கம் பிரச்சினைகளின் பாதிப்பையோ தீர்வையோ புரிந்துகொள்ளாத வகையில்
மயக்க நிலையில் வைத்திருப்பது எவை எவை என்று உணரச்செய்தல்.
எ)முரணற்ற
இயங்கியல் பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக்கொண்டு வர்க்க முரண்பாட்டுச் சிக்கல்களுக்குத்
தீர்வு கூறல்.
ஏ)
எவையும் அறிய முடியாதவை அல்ல; அறியப்படாதவை, மாறுவது ஒன்றே மாறாதது என்ற விதிகளை அறுவுப்பூர்வமாக
ஏற்றுக்கொள்ளுதல்.
ஐ)
ஒடுக்கப்பட்ட பெண்ணினம் தொழிலாளிகள், உழைக்கும் விவசாயிகள் சுதந்திரமும் சமத்துவமும்
பெறப் பாடுபடுதல்.
ஒ)
ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, இலாப வேட்டைக்காரர்களுக்கு எதிராக
போராட்டம் நடத்துதல்.
ஓ)
உழைப்பு, கூலி, மூலதனம் , பங்கீடு ஆகிய பொருளாதாரக் கூறுகளை அறிவியல் அடிப்படையில்
ஆய்வு செய்தல்.
எடுத்துக்காட்டு :
மனிதனே
மதத்தை உண்டாக்குகின்றான் ; மதம் மனிதனை உண்டாக்குவதில்லை, இந்த மார்க்சீய அறிவைக்கொண்டு
இரசிய மக்கள் “ஜாரும் வேண்டாம் ; கடவுளும் வேண்டாம் ; நமக்கு நாமேதான் - எல்லாம் நாமேதான் என்று உணர்ந்து புரட்சியில்
ஈடுபட்டனர்.
சமுதாய அளவில் மனிதர்களுக்காக மனிதர்களால் நல்வாழ்வை
ஏற்படுத்த மார்க்சீயம் விரும்புகிறது. கற்பிக்கப்பட்ட கடவுள், மதம், பாவம், புண்ணியம்,
மோட்சம், நரகம், முக்திநிலை நிர்வாணநிலை ஆகியவை மார்க்சீயத் திறனாய்வு மூலம் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.
……………………..தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக