செவ்வாய், 29 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 66.கெகல்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 66.கெகல்.   

Georg  Wilhelm Friedrich Hegel – 1770 – 1831.

கெகல், செர்மானிய கருத்தியல் கோட்பாட்டாளர். மார்க்சீய ஆய்வாளர்கள் கெகலின் கோட்பாடுகளைக் ‘கருத்து முதல்வாதம் என்பர்.

கருத்து முதல்வாதம்:

”நாம் தனித் தனிப் பொருள்களைத்தான் நமது புலன்களால் உணர்கிறோம். இப்பொருள்களால் ஆனதுதான் உலகம். ஆனால், புலன் உணர்வு என்பது மேம்போக்கான அறிவு; இது குழந்தைகளுக்குங்கூட உண்டு. பொருள்களின் சாரத்தைப்பற்றிய அறிவு  உண்மையான அறிவை புலனறிவு நமக்கு வழங்காது.

பொருள்:

புலன்களால் அறியப்படும் பொருள்கள்  எதார்த்தத்தில் மனிதர்களின் உணர்வுக்கு வெளியே நிலவுகின்றன. ஆனால், இது எதார்த்தத்தின் புற அம்சமே ஆகும். பிரபஞ்சத்தினை உருவாக்கியுள்ள பொருள் வகைப் புலப்பாடுகளின் அடிப்படை, படைக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாத தனிப்பட்ட புறப் புலப்பாடுகளின் நிரந்தரமான சாராம்சங்களாகும்.

கருத்து:

உலகத்தின் உண்மையான அடிப்படை நமது உணர்வுக்கு அப்பால் இருக்கிற நம்மால்  ஆய்வு செய்யப்படுகிற கருத்துருவங்கள் எண்ணங்களே என்றும் எல்லாப் பொருள் வகைகளும் உண்மைகளும் இந்த என்ணங்களிலிருந்து தோன்றுபவையே. இவைகளின் வெளிப்பாடே என்றும் ஒரு முடிவுக்கு ‘கெகல்’ வந்தார். இவை யாருடைய யாருடைய எண்ணங்கள் ? இவை உலகம் முழுவதையும் தழுவி நிற்பதால் இது ஏதாவது ஓர் “ஆன்மாவின்” எண்ணங்களாக இருக்க வேண்டும் என்று கூறி ‘உலக ஆன்மா’ அல்லது ’முழுமுதல் கருத்து’ (….. ) என்று இதற்குப் பெயர் வைத்தார் கெகல்.

……………………………………………….தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக