சான்றோர் வாய் (மை) மொழி : 60. காரல் மார்க்சு .
(Karl
Heinrich Marx – 1818 – 1883.)
பொருளியல் சிந்தனை
: தத்துவம் கருத்தியல் கற்பனை மாளிகையினின்றும் வெளியே இழுத்துவரப்பட்டது. தத்துவம்
தெருவோர மக்களைப் பற்றி எண்ணத் தொடங்கியது. சமய மோகத்தில் மூழ்கிக்கிடந்த மக்களை உலகியல்
வாழ்வைக் காட்டி ஊழல்களை ஒழிக்க ஆயத்தப்படுத்தினர்.
பொருளியல் சிந்தனையின் முன்னோடி
காரல் மார்க்சு. பொருளியச் சிந்தனையை இறைமறுப்பு இயக்கமாக்கினார்
நீட்சே. பிரான்சின் சார்த்தர் அண்மைக்காலச் சிந்தனையின் முன்னோடி.
கருத்தியல் மறுப்பு: செர்மானிய கருத்தியச் சிந்தனைகளுள் ’ எகல்’ கருத்தியம்
ஓர் இறுதி நிலை. முரணிய கருத்துகளின் விளைவாக
உலகையும் மனிதர் செயல்களையும் விளக்கினார். உலக வரலற்று நிகழ்வுகளைக் கருத்துப் போராட்டங்களாகக் கருதினர்.
தம் தத்துவ பீடத்தை அரசுக்கு ஆதாரமாக்கினார். அரசுக்குத் துதிபாடும் எகலின் தத்துவத்தை
உழைப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொருளை அடிப்படையாகக்கொண்டே வாழ்க்கைப் போராட்டங்களும்
வரலாற்று நிகழ்வுகளும் நடைபெறுகின்றன என மக்கள் எண்ணத் தொடங்கினர்.
ஆன்மா அழிவற்றது; இறைவன் எல்லாம் வல்லவர்
என்ற தத்துவம் பசி போக்காது என்று உணர்ந்த மக்கள் முதலாளித்துவ பிடியிலிருந்து விடுபட
காத்திருந்தனர். காட்சிக்குட்படும் பொருளே உண்மையென்றும் கருத்துலக வாழ்வினும் பொருளுலக
வாழ்வே தேவையென்றும் கருதினர். இத்தகைய சூழலில்தான் பொருளியச் சிந்தனைகளும் இறைமறுப்பு
இயக்கமும் தோன்றின.
காரல் மார்க்சு : ………………….தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக