தமிழமுது –194– தொல்தமிழர் இசை மரபு:54.
3. ஐங்குறுநூறு . தொல்காப்பியம்் - முதல்,கரு உரி. “
முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை.” -949.
முதற்பொருள் , கருப்பொருள், உரிப்பொருள் என முறையாகச் சொல்லும் நிலையில் இலக்கியத்துள் வழங்கியவற்றைக் கருதி அமைத்துக்கொண்டனர்.
“ மனை நடு வயலை வேழஞ் சுற்றும்
துறைகே ழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும்் யாமே
அல்லன் என்்னுமென் தடமென் தோளே.- வேழப்பத்து -11 .
நட்டு வளர்க்கப்பட்ட பசலைக்கொடி கொறுக்காந்தட்டை கொழு கொம்பாகச் சுற்றிப்படரும் தன்மைபோல்லும் தலைவனும் புறத்தொழுக்கம் நாடும் கொடுமைக்கு நாணி அவன் நல்லன் அல்லன் என்று பாங்கனிடம் தலைவி கூறினாள்.்
மேற்சுட்டியுள்ள பாடலில் முதல், கரு, உரிப் பொருள் என்ற மூன்றும் கூறலின் நாடக வழக்கும், தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகியல் ஆதலின் உலகியல் வழக்கும் உடன் கூறிற்று.
முதற் பொருள் என்பது நிலம், பொழுது எனும் இரண்டும் .
கருப்பொருள் என்றது தெய்வம், உணவு விலங்குகள், மரம்,செடிகொடிகள், பறவை, தோல்கருவிகள், தொழில், யாழ் போன்ற நரம்புக் கருவிகள், ஊர், நீர், பூ போன்றனவும் கருப்பொருளாகும்.
உரிப்பொருள் என்றது, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், இவற்றின் நிமித்தமும் என்பன உரிப்பொருளாகும்.
....................................தொடரும்.........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக