தமிழமுது –218– தொல்தமிழர் இசை மரபு:78.
8. புறநானூறு -- பொருநன் பாடுங்காலம்
“ ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்று எழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பகடு பல வாழ்த்தித்
தன்புகழ் ஏத்தினன் ஆக. என் வலத்து
இடுக்கண் இரியல் போக ஊன் புலந்து
அருங்கடி மென்பிணி அவிழ்த்த ஆம்பல
்தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உணப்
பான்பு உரி அன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழை அணி வாரா
ஒண்பூங் கலிங்கம் உடீஇ நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
ெல்லணைக் கிடந்தோன் ................
எற் பெயர்ந்த நோக்கி ............
.............அதற்கொண்டு
அழித்துப் பிறந்ததெனனாகி அவ்வழிப்
பிறர்பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே
ுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
நரைமுகவூகமொடு உகளும் கன்றுபல கெழீஇய
கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன் என
ஒருவனை உடையேன் மன்னே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே.--
”மாறோக்கத்து நப்பசலையார், 383: 1 – 5.
ஒளியுடைய புள்ளிகளைக் கொண்ட சேவல் கோழி கூவித் துயிலினின்றும் எழுப்பப் படுக்கையிலிருந்து எழுந்து குளிர்ந்த பனித் துளிக்கும் புலராத விடியற் காலத்தில் நுண்ணிய கோல் கொண்டு தடாரி என்ற பறையை இசைத்து நெடிய மனையின் முன்பக்கத்தில் நின்று பலவாகிய உழவு எருதுகளை வாழ்த்தி, வளமனையில் வாழும் அவியன் (வள்ளல்) புகழ்களைச் சொல்லிப் பாராட்டிப் பாடினேன்...
. பாட, உடல் மெலிவித்து என்னிடம் தங்கியிருந்த வறுமைத் துன்பம் நீங்கும்படி,..... குவிந்து பின் விரியும் ஆம்பல் பூவைப் போன்ற தேன் பரவியுள்ள கள்ளின் தெளிவை மணம் கமழும் மடாரில் ( கள் உண்ணும் கலம்) வார்த்து உண்ணச் செய்து அரிய காவலையுடைய அகன்ற பெரிய இல்லத்தில் தான் காண யாம் நெருங்குவதை விரும்பிப் பாம்பின் தோல் போன்ற வடிவையுடையதாய் மூங்கிலின் உள்பக்கத்தில் உள்ளத் தோலைப்போன்ற நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசை அறிய முடியாதபடி பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடையை உடுக்கச் செய்து, நுட்பமான பூண்களை அணிவித்து, மின்னல் போல் மின்னி வளைந்த இடையையும் அழகாகக் குழிந்த கொப்பூழையும் கற்புடைய மடந்தையான தன் மனைவி தன் பக்கத்தில் தழுவிக்கிடப்ப மென்மையான படுக்கையில் கிடந்து உறங்கியவன் ............................ என்னிடமிருந்து நீங்கிய ...பார்த்து...... அது கொண்டு மீளவும் பிறந்தவனைப் போன்று அங்குப் பிறரின் புகழைப் பாடிச் செல்வதைக் கருதேன் .. குறுகிய முலையை உண்ணுதற் பொருட்டுத் தாயைச் சுற்றித் திரியும் பால் அருந்தும் ஆட்டுக்குட்டி வெண்மையான முகமுடைய குரங்குக் குட்டியுடனே தாவுகின்ற மூங்கில்கள் நிறைந்த.... குன்றுகள் பல பொருந்திய கான நாடான விரைந்து செல்லும் தேர்களையுடைய அவியன் எனப்படும் ஒருவனை நான் எமக்குத் தலைவனாக உடையேன் ; அவன் தனது காக்கும் கடமையினின்று தவறான் ; அதனால் வெள்ளியான மீன் நிலை பிறழ்ந்து நிற்பதைக் குறித்து இந்த உலகம் என்னாகுமோ என்று நான் வருந்தேன்.
மேற்சுட்டியுள்ள பாடலில் சில அடிகள் சிதைந்துள்ளன., பொருநன் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது...
................தொடரும்...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக