ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தமிழமுது –217– தொல்தமிழர் இசை மரபு:77. ...இசை மரபை மறந்த பாணன் :

 தமிழமுது –217– தொல்தமிழர் இசை மரபு:77 

   8.   புறநானூறு --  இசை மரபை மறந்த பாணன் :  

 இந்நூலின் 149 ஆம் பாடலைப் பாடியவர் வன்பரணர் இவர் கோப்பெருநள்ளியின் பரிசிலைப் பெற்று அவனுடன் இருந்துவந்தார்அப்போது பாணர் காலையில் பாடவேண்டிய மருதப்பண்ணுக்குப் பதிலாக மாலையில் பாடவேண்டிய செவ்வழிப்பண்ணைப் பாடினர் ; மாலையில் பாட வேண்டிய செவ்வழிப்பண்ணுக்குப் பதிலாகக் காலையில் பாடவேண்டிய மருதப்பண்ணைப் பாடினர் ; இதனைக்கண்ட பெருநள்ளி ன்பரணரிடம் இதன் காரணம் யாது ..? என்று வினவினார் ; அவர் நிரம்ப இப்பாணர்க்குப் பரிசில் அளித்தாய் ஆதலால் பாடவேண்டிய முறையை இவர்கள் மறந்தனர் என்றார்.   

 

 “ நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்  

 மாலை மருதம் பண்ணிக் காலைக்   

கைவழி மருங்கிற் ெவ்வழி பண்ணி   

வரவுஎமர் மறந்தனர் அது நீ .  

புரவுக்கடன் பூண்ட வண்மையானே.” வன்பரணர்149 :.  

 ெருநள்ளியே வாழ்க...! ’நள்’ என்ற ஓசையையுடைய மாலை நேரத்தில் மருதம் என்ற பண்ணை இசைத்துகாலை நேரத்தில் எப்போதும் கையில் இருக்கும் இயல்புடைய யாழில் செவ்வழி என்ற பண்ணை இசைத்து எம் பாணர் தொன்றுதொட்டுவரும் வரலாற்று முறையை மறந்தனர் ; நீவேண்டுவன கொடுத்துப் பாணரைப் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்டிருப்பதால் அவர்கள் இசை மரபை மறந்துவிட்டனர்.   

 குறிப்பு: இசை முறைமையைப் பாணர் மறந்தற்குக் காரணம் அவரல்லர் ; நின் கொடைத் தன்மையே எனப் பெருநள்ளியின் கொடைத் தன்மையைப் பாராட்டினார்.  (மருதம் - மருதப்பண். ;  செவ்வழி - செவ்வழிப்பண் ; கைவழி - கையில் எப்போதும் இருக்கும் யாழ் . ; புரவுக்கடன் - பாதுகாக்கும் கடமை. ; வரவு - இசை வரலாற்று முறைமை.) 

.                   ........................தொடரும்................................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக