ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தமிழமுது –203– தொல்தமிழர் இசை மரபு:63. 6. கலித்தொகை:- முன்னுரை.

 தமிழமுது –203– தொல்தமிழர் இசை மரபு:63.  

            6.  கலித்தொகை:- முன்னுரை.  

 எட்டுத்தொகை நூல்களுள் யாப்பு வகையால் பெயர் பெற்றவை பரிபாடல், கலித்தொகை இரண்டுமே. தொல்காப்பியர்  அகப்பொருள் செய்திகளைப் பாடுதற்குரிய பாக்களாகப் பரிபாடல்,  கலித்தொகை  இரண்டினையும் குறித்துள்ளார், “ கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும் என்மனார் புலவர்” என்பார்.   

கலி யாப்பு பிற யாப்பு முறைகளினின்றும் வேறுபட்டது  ; தரவு, தாழிசை, அம்போதரங்கம், அராகம், தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளைக்கொண்டது என்று தொல்காப்பியம் கூறியுள்ளது.  கலிப்பாக்கள் பல வகைப்படும்., அவற்றுள் ஒத்தாழிசை யாப்பு வகையில் அமைந்தது கலித்தொகைப் பாடல்கள். கலித்தொகை 150 பாடல்களைக்கொண்டது, 

ஐந்திணைகளில் அமைந்துள்ள பாடல்களைப் பாடிய  ஐந்து புலவர்கள்: 

   கடவுள் வாழ்த்து - 1. நல்லந்துவனார்.  

 பாலை -  35. பாடல்கள்; பாலை பாடிய,  பெருங்கடுங்கோ.  

 குறிஞ்சி - 29, பாடல்கள் ; கபிலர்.  

மருதம், 35 பாடல்கள், மருதன் இளநாகனார்.  

முல்லை,- 17 பாடல்கள் ; சோழன் நல்லுருத்திரன். ந 

    நெய்தல்-  33. பாடல்கள் ; நல்லந்துவனார்.  ஆகியோர் பாடியுள்ளனர்.  

சஙக இலக்கிய அகப்பாடல்களுள் கைக்கிளைத் திணையில் அமைந்த பாடல்கள் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. (கலி. 56,57,58, 100) பெருந்திணைப்படல்களும் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.( 138 – 147.)  

      பிற முல்லைத்திணைப் பாடல்களில் காணப்பெறாத  ஏறு தழுவுதல் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 

 .................................தொடரும்........................................................... 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக