வியாழன், 26 பிப்ரவரி, 2026

தமிழமுது –221– தொல்தமிழர் இசை மரபு:81. ...முருகனைப் போற்றிப் பாடுவார் இயல்பு:

 தமிழமுது –221– தொல்தமிழர் இசை மரபு:81 

  பத்துப்பாட்டு:  முருகனைப் போற்றிப் பாடுவார் இயல்பு:     

 

 முருகு ொருநாறு பாணிரண்டு முல்லை    

பெருகு வளமதுரைக் காஞ்சி -- மருவினிய    

கோல நெடுநல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப்   

பாலை கடாத்தொடும் பத்து.”  

என்னும் பழஞ்செய்யுள் பத்துப்பாட்டுள் தொகுக்கப் பெற்ற நூல்களைக் கூறுகின்றது. 

 

“ முருகன் கோவில் கொண்டுள்ள , 1. திருப்பரங்குன்றம். 2, திருச்சீரலைவாய். 3. திருவாவிநன்குடி. 4. திருவேரகம். 5. குன்றுதோறாடல். 6. பழமுதிர்சோலைஆகிய ஆறு இடங்களின் சிறப்புகளையும் விரித்துக கூறுகின்றத. 

    1. ) திருமுருகாற்றுப்படை; 317 டிகளைக்கொண்டதுபாடியவர் நக்கீரர் 

பாட்டுடைத் தலைவர்முருகன்.  

பாடு பொருள்முருகன் அருள் பெற்றவன் அருள் பெறாதானை முருகனிடம் ஆற்றுப்படுத்துவது.  

     முருகனைப்போற்றிப் பாடுவார் இயல்பு:    

 

புகைமுகந் தன்ன மாசுஇல் தூஉ உடை  

 முகை வாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து   

செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்   

நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்  

மென்மொழி மேவலர் இன்நரம்பு உளர .”-3. திருஆவினன்குடி: 138 – 142. 

 

புகையை முகந்து கொண்டால் ஒத்த நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினை உடையவர் ; தமது எஃகு செவியால் இசையை அளந்து  பண்ணுறுத்திய வார்க்கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மை உடைத்தாகிய மனம் ொண்டவர் ; எக்காலமும் மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய கந்தருவர்கள் இனிய யாழ்  நரம்பினை இயக்கமுருகன் அருள் வேண்டிப் பாடினர்.  

                               ................தொடரும்............... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக