தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -48.
முனைவர் இரெ. குமரன்: 1. நற்றிணை: மருதம்.
தொல்தமிழர் - விழாக்களம் :
“ வாளை வாளீன் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ஆம்பல் உருவ நெறித்தழை
ஐதுஅகல் அல்குல் அணிபெறத் தைஇ
விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையாமையோ அரிதே...”
- ஒளவையார், நற். 390: 1 – 8.
தோழி...! வாளை மீன்கள் வாள் போன்று பிறழ அவற்றை அப்பொய்கையிலேயே நீர் நாய் தங்கித் துயில் கொள்ளும் ; கொடையில் சிறந்த கிள்ளிவளவனின் கோயில் வெண்ணியைச் சூழ்ந்த வயலின் வெண்மையான ஆம்பல் விளங்கும் ; அந்த ஆம்பலின் அழகிய ்நெறிப்புடைய தழையை மென்மையாய் அகன்ற அல்குலிடத்தே அழகுற உடுத்துவர் ; அங்ஙனம் உடுத்தி விழா அயரும் களத்திற்கு யானும் செல்ல வேண்டும் ; விழாக் களத்தில் புதிய பரத்தையருள் ஒருத்தி தோற்றப் பொலிவுடன் செல்லுதலைப் புதிய வருவாயையுடைய ஊரன் காண்பானாயின் ஏனையோரைக் காணாது இவளையே மணம் புரிவான் ; அன்றி அவளை விடுதலும் அவனுக்கு அரிதாகும்.
( தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயிலாக வந்தோர் கேட்குமாறு தலைவி, தோழியிடம் “தலைவன் புதிய பரத்தையரைக் காணின் அவர்களை மணம் புரிந்து, பலப்பல பெண்கள் தம் நலன் இழக்குமாறு செய்வான்.” என்று கூறியது.)
( வைகுதல் - தங்குதல் ; உரு - அழகு.; ஐது - மெனமை ; செலீஇயர் - செல்ல என்னும் ச்=வினையெச்சம்.; வாய்மொழி - வாய்மை.)
நற்றிணை முற்றிற்று.
2. குறுந்தொகை, ...........................தொடரும்..............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக